லாரி மீது கார் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி - 5 பேர் காயம்

லாரி மீது கார் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி - 5 பேர் காயம்

லாரி மீது கார் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி

மருதமலை கோவிலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய போது கார் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஈச்சங்காட்டூரைச் சேர்ந்த சண்முகம் (54), சிவகுமார் (40), சாமிநாதன் (52), மணி (58), ராஜ்குமார் (45), தண்ணீர்தொட்டி பகுதியை சேர்ந்த செல்லப்பன் (வயது 62). ரியல் எஸ்டேட் அதிபர்கள். இவர்கள் நேற்று முன்தினம் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு காரில் ஓமலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை சண்முகம் ஓட்டி வந்தார். சங்ககிரி குப்பனூர் பைபாஸ் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி டிரைவர் குணசேகரன் (37) என்பவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் வந்த செல்லப்பன், சிவகுமார், சாமிநாதன், மணி, ராஜ்குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story