ஆரணி அருகே புதுப்பிக்கபட்ட அங்கன்வாடி மையம்

ஆரணி அருகே புதுப்பிக்கபட்ட அங்கன்வாடி மையம்

புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் ஊராட்சிக்குபட்ட எம். பி.தாங்கல் கிராமத்தில் ஆரணி சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் முருவம்மாள் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. இதை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலர் வீணாரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலம் 3 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய மேற்கூறை புனரமைப்பு புதிய கழிவறை, வகுப்பறை டைல்ஸ் அமைத்தல், புதிய தண்ணீர் தொட்டியுடன் தண்ணீர் வசதி, ஓவியம் மற்றும் வண்ணம் அடித்தல் பணியுடன் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பணிகள் செய்யபட்டன. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஒப்படைப்பு விழாவில் கிராம மகளிர் குழு பெண்கள் மூலம் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக உதவியாளர், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் கிராம பொது மக்கள் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் கிராம வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் சீனிவாசன் அறக்கட்டளை அலுவலர் கோபி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story