உடன்குடியை வெள்ள பாதிப்பு பகுதியாக அறிவிக்க கோரிக்கை

உடன்குடியை வெள்ள பாதிப்பு பகுதியாக அறிவிக்க கோரிக்கை

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் "வெள்ளாளன்விளையில் கடந்த டிச.17 மற்றும் 18ஆகிய ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சடையநேரி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு 2500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பல குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளம் சூழ்ந்துள்ள வெள்ளாளன்விளையில் வீடுகளுக்குள் பல நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் மூலமாக வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரணம் வழங்கிடவும், புதிதாக வீடுகள் கட்டி கொடுத்திடவும், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story