தேவிபட்டணம் கோவில் குளத்தில் அமலைச் செடிகளை அகற்றி சீரமைக்க கோரிக்கை...

தேவிபட்டணம் கோவில் குளத்தில் அமலைச் செடிகளை அகற்றி சீரமைக்க கோரிக்கை...

குளம்

தேவிபட்டணம் கோவில் குளத்தில் அமலைச் செடிகளை அகற்றி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலேயே அளவிலும் உயரத்திலும் மிகப்பெரிய காளியம்மன் சிலையுள்ள கோவிலாக வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்து சமய ஆட்சித்துறையின் கீழ் இக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள தட்டாங்குளமானது புனித இடமாகக் கருதப்படுகிறது.

கடந்த மாதங்களில் இப்பகுதியில் பெய்த மழையினால் இக்குளம் பெருகியது. தற்பொழுது இக்குளத்தில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அமலைச் செடிகள் குளம் முழுவதும் பெருகிவிட்டதால் யாரும் குளத்திற்குள்ளே செல்லமுடியாத நிலையில் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

பெரும்பாலும் தற்பொழுது பக்தர்கள் குளிப்பதற்கு கஷ்டப்படுகின்றனர். எனவே இந்து சமய அறநிலை துறையினர் கோவில் குளத்தில் உள்ள அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துணி, சாக்கு போன்றவற்றை இங்கு கொண்டு வந்து அலசி தண்ணீரை மாசு படுத்துவதை தடுக்கும் வகையில் குளத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story