பள்ளிப்பட்டு நீதிமன்ற சந்திப்பில் நிழற்குடை அமைக்க கோரிக்கை !

பள்ளிப்பட்டு நீதிமன்ற சந்திப்பில் நிழற்குடை அமைக்க கோரிக்கை !

 நிழற்குடை

பள்ளிப்பட்டு நீதிமன்ற சந்திப்பில் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்.வெயிலிலும், மழையிலும் பேருந்து பயணியர் காய்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில், சோளிங்கர் கூட்டு சாலையில் அமைந்துள்ளது, பள்ளிப்பட்டு நீதிமன்ற வளாகம். இதே பகுதியில் உணவு பாதுகாப்பு கிடங்கு, தீயணைப்பு நிலையம், வனத்துறை அலுவலகம், அரசு மணல் குவாரி உள்ளிட்டவை அமைந்து உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் உள்ள சந்திப்பில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதில், ஆந்திர மாநிலம் நோக்கி, பள்ளிப்பட்டு மார்க்கமாக செல்லும் மார்க்கத்தில் மட்டும் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. அதுவும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சீரழிந்து வருகிறது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, ஆர்.கே.பேட்டை மார்க்கமாக பயணிக்கும் பகுதிவாசிகளுக்கு நிழற்குடை ஏதும் கட்டப்படவில்லை. இந்த சந்திப்பில் உள்ள சிறிய மரத்தின் அடியில் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், வெயிலிலும், மழையிலும் பேருந்து பயணியர் காய்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிகளுடன் மூன்று மார்க்கத்திலும் புதிய நிழற்குடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story