இராசிபுரம் அருகே வாடிக்கையாளர்களை கவர்ந்த உணவகம்
மூடுபனி தெளிப்பான்கள்
உலகம் வெப்பமயமாவதை தடுக்கும் வகையில் ஏசி எனப்படும் குளிரூட்டுகளை பயன்படுத்துவதற்கு மாற்றாக இந்த மிஸ்டிங் சிஸ்டம் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பவன் தனியார் உணவகத்தில் செயற்கை மூடு பணியை (MISTING SYSTEM) உருவாக்கி சுட்டெரிக்கும் வெயிலில் வாடிக்கையாளர்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து உள்ளனர்.
சாய் பவன் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது தற்போது நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அனல் பறக்கும் வெப்பத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சிரமம் இன்றி உணவு வகைகள், டீ, பலகாரம் ஆகியவை நிம்மதியாக உண்ணும் வகையில் வெப்பத்தை தணிக்க இது போன்ற குளிர்ச்சியான சூழல் ஏற்படுத்தி உள்ளோம்
மேலும் இயற்கையான முறையில் எந்த ஒரு கெமிக்கல் இல்லாமல் தூய்மையான தண்ணீரைக் கொண்டு இதை உருவாக்கி உள்ளோம். என தெரிவித்தார் மேலும் தற்போது 100 ,104, டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவும் குறிப்பிட்டார்.