சிவகாசியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆய்வு கூட்டம்

சிவகாசியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம்

சிவகாசியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆய்வு கூட்டம்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 கிராம ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் திட்ட பணிகள் குறித்தும் பணிகளை விரைவாக துரித படுத்த வேண்டியும் மேலும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் ஜான்கென்னடி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, சிவகுமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜன், ஆனைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ், நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். இந்தஆய்வு கூட்டத்தில் 54 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், தொடங்கப்பட வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர்.

நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து தொடங்கி, முடிக்க அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்களை அறிவுறுத்தினர். பல ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பகுதியில் செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி போதிய நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். படம் விளக்கம்,சிவகாசி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் உதவி திட்ட அலுவலர் ஜான்கென்னடி தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story