மாடக்குளம் பிரதான சாலையில் சாலை பணிக்கான ரோடு ரோலர் கடைக்குள் மோதி விபத்து

மாடக்குளம் பிரதான சாலையில் சாலை பணிக்கான ரோடு ரோலர் கடைக்குள் மோதி விபத்து

ரோடு ரோலர் கடைக்குள் மோதி விபத்து

மதுரையில் சாலை பணிக்காக சென்ற ரோடு ரோலர் வாகனம் திடிரென கடைகள் மீது மோதி விபத்து கடைகள் - பைக்குகள் சேதம் - பரபரப்பு - காவல்துறை விசாரணை.
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியில் பிரதான சாலை பகுதியில் உள்ள சிறிய அளவிலான சந்துகளில் புதிய தார்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த சாலைகளை மேடு பள்ளங்களை சீரமைக்கும் பணிக்காக வந்துகொண்டிருந்த ரோடு ரோலர் வாகனமானது திடிரென கட்டுப்பாட்டை இழந்து பழங்காந்த்தம் பிரதான சாலையின் ஒரத்தில் இருந்த கடைகள் மீது திடிரென மோத தொடங்கியது. அங்கிருந்த பெயிண்ட் கடை மற்றும் அருகேருகே உள்ள கடைகளில் மோதி நின்றது. இதில் கடையின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் ரோடு ரோலர் வாகனம் மோதிய விபத்தில் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கடையில் உள்ளவர்கள் அலறியடித்து தப்பியோடினர். இந்த விபத்து ரோடு ரோலர் வாகனத்தை இயக்கிவந்த ஓட்டுனரான மதுரையை செந்திலிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இன்று தான் ரோடுரோலர் வாகனத்தை அந்த பகுதியில் இயக்கியதும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் மகப்பேறு மருத்துவமனை மற்றும் பள்ளிகள் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணாக்கர்கள் அதிகளவு சென்றுவரும் நிலையில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அரசு ஒப்பந்த பணிகளில் போது முறையான அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story