ஆண்டுக்கணக்கில் சரிசெய்யப்படாத சாலை - பொதுமக்கள் சாலை மறியல்

ஆண்டுக்கணக்கில் சரிசெய்யப்படாத சாலை - பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராசூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். பருவ மழை காலங்களில் பாரசூர் நெல்வாய் வழியாக செல்லும் சாலை சிதிலமடைந்து முழங்கால் அளவிற்கு நீர் தேங்கி சிரமம் ஏற்படுகிறது. வருடக்கணக்கில் இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர் . இது குறித்து மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செய்யாறு -கொர்க்கை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் கலைத்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story