மலைபாதையில் உருண்டு வந்த பாறை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி.
குன்னுர் அருகே 50 அடி உயரத்தில் இருந்து வந்த பாறை காரின் மேல் விழுந்தது. நலவாய்ப்பாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயேந்திரன் (64). இவர் தனது காரில் ஊட்டிக்கு சென்று விட்டு அங்கிருந்து குன்னூர் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தார். கார் குன்னூர் மலைபாதையில் சென்று கொண்டிருக்கும் போது கே. என். ஆர் பகுதியை கடக்கும் போது சுமார் 50 அடி உயரத்திலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது. ஜெயேந்திரன் கைவிரலில் பாறை விழுந்ததால் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். வலியில் துடித்த அவரை ரோந்து போலிசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். முன் இடது இருக்கையில் யாராவது அமர்ந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் இரவில் மலைபாதையில்பாறை காருக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story