ஆத்தூர் அருகே காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆத்தூர் அருகே காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

ஆத்தூர் அருகே காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திருக்கனூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் தினேஷ் குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரும் திருச்சி மன்னர்பிள்ளை தெருவை சேர்ந்த சொர்ணம் மகள் பூர்ணபிரியா (23) என்பவரும் காதலித்து வந்தனர்.

தினேஷ்குமார் திருச்சிக்கு வேலைக்கு சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தாலுகா ராயப்பனூரில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து பூர்ணபிரியாவை காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story