டிரம்ஸ் இசைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

டிரம்ஸ் இசைத்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

ஆசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்று ஈரோடு திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் டிரம்ஸ் இசைத்து உற்காசக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்று ஈரோடு திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் டிரம்ஸ் இசைத்து உற்காசக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புனேவில் கடந்த 8 மற்றும் 9.ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்றன. இதில் கோஜூரியோ கராத்தே போட்டிகளில் ஈரோட்டை சேர்ந்த 11 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று, சர்வதேச போட்டிக்கு தேர்வாகினர். புனேவில் இருந்து ஊர்திரும்பிய இளம் வீரர்களுக்கு உறவினர்களும், பயிற்சியாளர்களும் டிரம்ஸ் இசைத்து மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் நடந்த மாநில போட்டியிலும், மும்பையில் நடந்த தேசிய போட்டியிலும் தேர்வாகி புனேவில் நடத்த ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை மூலம் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story