குளச்சல் துறைமுகத்தில் மணல் அகற்றும் இயந்திரம் வருகை

குளச்சல் துறைமுகத்தில் மணல் அகற்றும் இயந்திரம் வருகை
குளச்சல வந்த குழாய்கள்
குளச்சல் துறைமுகத்தில் மணல் அகற்றும் இயந்திரம் வந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் தங்கு தளத்தில் மணல் திட்டுக்கள் தேங்கி சகதியுடன் காணப்படுகிறது. இதனால் படகுகள் தரைதட்டி நிற்பதுடன், அவற்றை படகு தளத்தில் நிலைநிறுத்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுக படகு தளத்தை தூர்வார வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்றி தூர்வாருவதற்கான முன்பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக ராட்சத மிதவை, மற்றும் அவற்றை இணைக்கும் மணல் உறிஞ்சி குழாய்,

இயந்திரங்கள் குளச்சல் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களில் தூர்வாருவதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் 3 மாதத்தில் தொடர்ந்து நடைபெற்று முடிவடையும். அதன் பின்னர் துறைமுக விரிவிக்கா பணிகளும் துவங்க உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story