தண்ணீர் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் பலி

காங்கேயம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம் அய்யாசமிநகர் காலனி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் தர்ஷன்,17, உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷனுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும், இதற்க்காக கோவை தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை 10:45 மணியளவில் காங்கேயம் அருகே உள்ள அகஸ்திலிங்கம்பாளையம் ஆண்டிக்காடு தோட்டத்து தண்ணீர் தொட்டியில் தர்ஷன் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது தீடிரென வலிப்பு ஏற்பட்டு தண்ணீர்க்குள் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்களால் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர், தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story