நண்டு பிடிக்க சென்ற பள்ளி மாணவன் குட்டையில் விழுந்து உயிரிழப்பு
மாதவன்
தேன்கனிக்கோட்டை அருகே நண்டு பிடிக்கச் சென்ற 5 ஆம் வகுப்பு மாணவன் குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் வினோத், இவரது மகன் மாதவன் (10) இவர் அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று மாதவன் தனது தம்பிகளான ஆதவன் மற்றும் மதன் ஆகியோரோடு சேர்ந்து கிராமப் பகுதியின் அருகே உள்ள கிணற்று குட்டையில் நண்டு பிடிக்க இறங்கி உள்ளார். அப்போது மாதவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து குட்டையில் தேங்கியிருந்த சேற்று நீரில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார் அருகில் யாரும் பார்க்காத நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குட்டையில் மாணவன் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story