குமாரபாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி !!

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரேணுகா தலைமையில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு கல்வியியல் கல்லூரி (பொ) முதல்வர் அருணாச்சலம் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இயற்பியல் துறை மாணவ, மாணவியர் பல்வேறு படைப்புகளை உருவாக்கி, பார்வைக்கு வைத்திருந்தனர். சோலார் பயன்பாடுகள், காந்தசக்தி அலாரம், தானியங்கி போக்குவரத்து சிக்னல், அனல் மின்சார பயன்பாடுகள், தானியங்கி தெரு விளக்குகள், எதிர்கால எரிபொருள், பென்சில் வடிவில் வெல்டிங் சாதனம், காந்த சக்தி குளிர்சாதனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படைப்புகள் மாணவ, மாணவியர்களால் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கல்வியியல் கல்லூரி முதல்வர் அருணாச்சலம், அனைத்து படைப்புகளுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: மனித வாழ்வில் அறிவியலை பிரிக்க முடியாது. மாணவ, மாணவியர்கள் அறிவியல் அறிவை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் யாவும் அறிவியல் படைப்புகளே. பல அறிவியல் ஞானிகளால்தான் மனித வாழ்வு மேன்மையடைந்து வருகிறது. எதிர்கால சந்ததிகளுக்கு மேலும் புதிய படைப்புகள் உருவாக்கி தரும் கடமை உங்கள் கைகளில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்கள் அனுராதா, பவித்ரா, ரகுபதி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story