பிளஸ் 2 தேர்வில் முதலிடம் - மாணவிக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவச சீட்.

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் -  மாணவிக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவச சீட்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவி பூங்கோதைக்கு இலவசமாக கல்லூரி படிப்பை படிக்க சீட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் என்பவரின் மகள் பூங்கோதை சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னையில் 578 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த மாணவிக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரி சேர்மன் தங்கள் கல்லூரியில் அவர் விரும்பும் படிப்பான பீ காம் வணிகவியல் துறைக்கு முழு செலவையும் ஏற்று சீட் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலிடம் பிடித்த மாணவி பூங்கோதை, தனது தந்தை ஆட்டோ ஓட்டுனர், தாய் வீட்டு வேலை செய்கிறார் என்றும் தனது சகோதரி கல்லூரியில் படித்து வருவதாகவும் பொருளாதாரத்தில் கடும் சிரமம் அடைந்து வந்த போதும் தன் முழு விடா முயற்சியால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்தார் . எத்திராஜ் போன்ற இத்தனை பெரிய கல்லூரி சார்மேன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விருப்பமான துறையை தேர்வு செய்து படிக்க முழு உதவியும் அளிப்பதாக தெரிவித்தது நம்ப முடியாத மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.மாணவி பூங்கோதை. தொடர்ந்து, தனக்கு CA படிக்க விருப்பம் இருப்பதாகவும் தற்போது எத்திராஜ் கல்லூரி அளித்துள்ள வாய்ப்பு மூலம் B Com படிப்பில் நிர்வாக வணிகவியல் மேலாண்மை துறை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, பேசிய எத்திராஜ் கல்லூரி சார்மேன் முரளிதரன் எங்கள் கல்லூரியில் ஏற்கனவே இது போல் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு கல்லூரியில் அவர்கள் விரும்பும் துறையில் சீட் அளித்து முழு கல்லூரி கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அது போல் இந்த ஆண்டும் செயல்படுத்தி உள்ளோம் இதே போல் மற்ற தனியார் கல்லூரிகளும் ஒரு சீட்டாவது வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.

Tags

Next Story