கச்சராபாளையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கச்சராபாளையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  விற்றவர் கைது

காவல் நிலையம் 

கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி தலைமையிலான போலீசார் நேற்று கடத்துார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் போலீசார் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்த 25 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் வெங்கடேசன்,40; என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story