காசிக்கு செல்லும் பக்தர்களுக்கு வழியனுப்பு விழா
காசிக்கு செல்லும் பக்தர்கள்
சேலம் ரயில் நிலையத்தில் காசிக்கு செல்லும் பக்தர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
காசி தமிழ் சங்கம் மூலமாக பொதுமக்களை காசிக்கு அழைத்து செல்லும் முதற்கட்ட சிறப்பு ரெயில் கோவையில் இருந்து புறப்பட்டு சேலம் ஜங்சன் ரயில்வே நிலையத்திற்கு இன்று காலை வந்தது. அப்போது சேலம் மாவட்ட பாஜக தலைவர்கள் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
சேலத்தில் இருந்து காசி செல்லும் யாத்ரீகர்களை பாஜக மாநில சுற்றுபுறசூழல் தலைவர் கோபிநாத், தலைமையில் வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாரளுமன்ற பொறுப்பாளர் அண்ணாதுரை, பார்வையாளர் ஏ.சி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story