தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

 கணேஷ்

கொரடாச்சேரி பகுதியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கொரடாச்சேரி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த கணேசன் என்கிற கணேஷ் அப்பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கடந்த 29. 12.2023 ஆம் தேதி கூத்தாநல்லூர் காவல் சரக பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் இருந்து வந்தவர் மீது எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story