காங்கேயத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் தொடர் விபத்து

காங்கேயத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் தொடரும் விபத்துக்கள் நிகழ்வதல் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

காங்கேயம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். நாகப்பட்டினம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலை காங்கேயம் வழியாக செல்கிறது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த இருவழி தேசிய நெடுஞ்சாலை கோவை முதல் கரூர் வரை 140 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கோவை முதல் பல்லடம் வரை பணிகள் முடிவடைந்து விட்டது. தற்போது பல்லடம் முதல் காங்கேயம்,வெள்ளகோவில் வழியாக கரூர் வரை இதற்கான பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடைபெற்று வருகின்றது. காங்கேயம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலம் கட்டும் பணி பாதி சாலை வரை சுமார் 10 அடி ஆழ குழி தோண்டப்பட்டு கான்கிரீட் போட கம்பிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகில் குவியிலாக மண் கொட்டப்பட்டும் கிடைக்கின்றது. வாகனங்கள் செல்லும் பொழுது புழுதி பறப்பதும் மற்றும் வானங்களின் ஓட்டுநர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.

கான்கிரீட் கல்லின் ஓட்டை போட்டு குச்சியில் சிவப்பு துணி கட்டி நீண்ட தூரத்துக்கு பல கற்கள் எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களே அதிக படியான விபத்துக்களை ஏற்படுத்துகின்றது. எச்சரிக்கையாக ரோட்டில் ஓரத்தில் மண் முட்டைகள் வரிசையாக வைத்துள்ளனர் இரவு நேரத்தில் அவை இருப்பது தெரியவில்லை, அதனால் இரு சக்கர வாகனங்கள் அதன் மீது மோதி பலர் காயமடைந்து வருவதுடன் கடந்த வாரத்தில் ஒருவர் பலியானதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர தரைப்பாலங்கள் வேலை நடைபெறுவது வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதத்தில் அறிவிப்பு பதாதைகளை பாலம் வேலை நடைபெறும் இடத்திற்கு அருகிலே வைத்துள்ளனர். இதனால் பக்கத்தில் வந்தவுடன் திடீரென நிறுத்தப்படும் வாகனங்கள விபத்தில் சிக்கி வருகின்றது இவ்வாறு கடந்த சில மாத கால விபத்துகளில் 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை காங்கேயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி ராஜேஷ் (32) என்பவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். முத்தூர் பிரிவு அடுத்து பாலம் வேலை நடையிற்று வருகின்றது சுமார் இருபுறமும் பலம் கட்டும் பணி முடிவடைந்து சாலையில் மையத்தில் மட்டும் வேலைய முடிக்காமல் மண் கொட்டிவைத்துள்ளார். இன்று காலை பனிப்பொழிவின் காரணமாக சாலை சரிவர தெரியாமலும் மண் திட்டின்மிது மோதி கார் குழிக்குள் விழுந்துவிட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காருடன் குழியில் விழுந்த ராஜேஷை பத்திரமாக மீட்டனர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர்த்தபினர். பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் காரை குழியில் இருந்து வெளியே எடுத்தனர். தேசிய நெடுஞ்சாசாலையின் விரிவாக்க பணியான மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கடந்த 3 மாதத்தில் மட்டும் ஏற்பட்ட 10க்கும் மேற்பட்ட விபத்தில் 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியது காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story