கோவையில் சுற்றுலா சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்
கோவை நஞ்சுண்டாபுரம் பார்சன் குடியிருப்பில் வசித்து வருபவர் அன்பரசன்(46).தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த 23ம் தேதி காலை தனது குடும்பத்தினருடன் மூணார் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மறுநாள் இவரது வீட்டின் எதிரே வசிக்கும் சுரேஷ் என்பவர் அன்பரசனை அழைத்து வீட்டின் முன் கதவு உடைக்கபட்ட நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து மூணாரில் இருந்து குடும்பத்தினருடன் வீடு திரும்பிய அன்பரசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டிருந்த வைர நெக்லஸ்,தோடு,டாலர் செயின்,வளையல்கள்,மோதிரம் என பதினோறு பவுன் நகை திருடபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து ராமநாதபுரம் காவல்நிலையத்தில் அன்பரசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொறுத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் தேடி வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள் வாழும் நெருக்கமான குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.