சிகரெட்டுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு அடி உதை 

சிகரெட்டுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு அடி உதை 
பைல் படம்
குளச்சல் அருகே சிகரெட்டுக்கு காசு கேட்ட கடைக்காரரை தாக்கிய சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (53). அந்தப் பகுதி சந்திப்பில் சிறு மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ததேயூஸ் (52) என்பவர் ஆட்டோவை ராமசாமி கடையின் முன்பு நடத்திவிட்டு சிகரெட் கேட்டாராம். ராமசாமி சிகரெட் எடுத்து கொடுத்துவிட்டு அதற்குரிய காசை கேட்டுள்ளார்.

ஆனால் காசு கொடுக்காத ததேயுஸ் தகாத வார்த்தைகள் பேசி திட்டியதுடன், கடையில் கிடந்த மர நாற்காலியை சேதப்படுத்தி, ராமசாமியை தாக்கியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். உடனே ததேயுஸ் ஆட்டோவில் இருந்த கம்பி எடுத்துக்காட்டி ராமசாமியை மிரட்டி விட்டு சென்றாராம்.

இதில் படுகாயம் அடைந்த ராமசாமி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ததேயுஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story