கன்டெய்னர் மோதி விபத்து - சாலையில் விழுந்த சிக்னல் கம்பம்

கன்டெய்னர் மோதி விபத்து - சாலையில் விழுந்த சிக்னல் கம்பம்

சேதமடைந்த சிக்னல் கம்பம்

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம் அடுத்த, பனப்பாக்கத்தில், வைப்பூர் செல்லும் சாலை பிரிகிறது. இங்கு, போக்குவரத்தை கட்டுப்படுத்த தானியங்கி சிக்னல் கம்பம் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சிக்னல் கம்பத்தில், அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், கம்பம் சாலையின் நடுவே விழுந்தது. அச்சமயம் சாலையில் வாகனங்கள் எதும் செல்லாததால் அசம்பாவிதம் எதும் ஏற்படவில்லை. இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார், சாலையில் விழுந்த சிக்னல் கம்பத்தை அங்கிருந்த அகற்றினர்.

Tags

Next Story