தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி உள்ளிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊழியம் 725 ரூபாய் வழங்கிட வேண்டும் , பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூய்மை மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பதாகைகளை ஏந்தியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரப் பணிகள் துறை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story