கிளாய் சாலையில் தடுப்பு சுவரின்றி சிறுபாலம்

கிளாய் சாலையில் தடுப்பு சுவரின்றி சிறுபாலம்

சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்து, கிளாய் கூட்டுரோடு சந்திப்பில் இருந்து, கிளாய் செல்லும் பிரதான சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியே, திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை, வயலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், கிளாய் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயில், சாலையின் குறுக்கே சிறுபாலம் உள்ளது.

இந்த சிறுபாலத்தில், சாலையில் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லை. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வானங்கள், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, கால்வாய் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, கிளாய் ஏரி உபரிநீர் கால்வாயில், சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story