ஏடிஎம் இயந்திரத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு  

ஏடிஎம் இயந்திரத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு  

பைல் படம் 

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் ஏடிஎம் இயந்திரத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் கல்லூரி சாலையில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஏடிஎம் மையத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஏடிஎம் மையத்துக்கு அருகில் உள்ள ஒரு கடையில் பாம்பு புகுந்ததாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

ஆனால் கடையில் பாம்பு சிக்கவில்லை. இதற்கிடையில் இரவு 7 மணிக்கு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் அங்கு பணம் எடுக்கும் இயந்திரத்துக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அலறியடித்து ஓடினார்கள். இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஏடிஎம் எந்திரத்தின் உள்ளே பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். ஏடிஎம் இயந்திரத்தை பிரித்து எடுத்தால் தான் பாம்பை மீட்க முடியும் எனக் கூறிவிட்டு அவர்கள் சென்றனர். இதை தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு அந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டது. இதன் காரணமாக நேற்று முதல் இன்று வரையிலும் பணம் எடுக்க வந்தவர்கள் ஏடிஎம் மையம் மூடி கிடந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story