கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு உண்டானது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென ஐந்து அடி நீளம் உள்ள பாம்பு புகுந்தது. இந்தப் பாம்பை பார்த்ததும் பொதுமக்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர். அருகிருந்த அலுவலர்கள் பொதுமக்கள் ஒதுங்குமாறு உஷார் படுத்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புதருக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள பாம்பை வெளியே கொண்டு வந்தனர். பாம்பை பார்த்ததும் பொதுமக்கள் கூட்டம் கூடியது. பத்திரிகையாளர்களும் படம் பிடித்தனர். பின்பு தீயணைப்பு துறையினர் பாம்பு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதியில் பாம்பை விட்டனர்.

Tags

Next Story