சேலம் நெத்திமேட்டில் கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
கோவிலுக்குள் புகுந்த பாம்பு
சேலம் நெத்திமேட்டில் கோவிலுக்குள் புகுந்த பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
சேலம் நெத்திமேட்டில் தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் மற்றும் மாசித்திருவிழா நடந்தது. இந்த நிலையில் நேற்று கோவிலுக்குள் 6 அடி நீள நாக பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து கோவில் ஊழியர்கள் அதனை லாவகமாக பிடித்தனர். இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வீரர்கள் அங்கு சென்று பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
Next Story