தேனி பபேருந்து நிலையத்தில் ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி சமூக ஆர்வலர்
மூதாட்டியுடன் சமூக ஆர்வலர்
தேனி புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற மூதாட்டிக்கு சமூக ஆர்வலர் உதவி செய்துள்ளார்.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பாப்பாத்தி என்ற மூதாட்டி கடந்த சில நாட்களாக உணவின்றி ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார்.
அவரை தேனி டிஎஸ்பி பார்த்திபன் வழிகாட்டுதலின்படி எம். சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித் குமார் காவலர் ஜெயபிரபு உதவியுடன் முதியவரை மீட்டு அறப்பணி தேவன் பட்டி மனிதநேய முதியோர் இல்லத்தில் படைத்தனர்.
மனிதநேயமிக்க செயலை கண்ட அப்பகுதி மக்கள் ரஞ்சித் குமார் மற்றும் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.
Next Story