தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கிய சமூக ஆர்வலர்

தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கிய சமூக ஆர்வலர்

நிவாரண உதவிகள் வழங்கல் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்எஸ்எச் மெட்டல் காஸ்டிங் பாபு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது, இந்த மழை தூத்துக்குடி மட்டுல்லாது திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முழுவதும் பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பெரும் பாதிப்புக்குள்ளாகியது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உதவி செய்தவதற்காக சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்எஸ்எச் மெட்டல் உரிமையாளர் காஸ்டிங் பாபு தலைமையில் இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில், 10 டன் அரிசி மற்றும் ஆயிரம் போர்வை மற்றும் பிஸ்கட், பிரட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களுடன் சமூக ஆர்வலர் காஸ்டிங் பாபு தலைமையில் அவரது குழுவினர் தூத்துக்குடி சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண பொருட்களை பஞ்சாயத்து தலைவர் சரவணனிடம் வழங்கினர்.

பின்னர், கோயில்பிள்ளைவிளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வில், சென்னையை சேர்ந்த புலியூர் கணேசன், சாந்தகுமார், அருண், இங்க் மணி, கபாலி, திராவிட பக்தன், செல்வா, சுகுமாறன், பாபு பாய், சுந்தர்ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story