நத்தத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

நத்தத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

நத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை (பிப்.29) நடைபெறுகிறது.

நத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை (பிப்.29) நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில், எலும்பு முறிவு மருத்துவா், மன நல மருத்துவா், கண் மருத்துவா், காது மூக்கு தொண்டை மருத்துவா் உள்ளிட்டோா் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அடையாள அட்டைப் பெறாத, வேறு உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்

Tags

Next Story