அரசின் நலத் திட்டங்களை பெறும் சிறப்பு முகாம்
நலத்திட்டங்கள் வழங்கல்
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் பளியா் இன மக்கள் அரசின் நலத் திட்டங்களை பெறும் வகையில் நடைபெறும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பூங்கொடி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் குட்டிக்கரடு, பாலசமுத்திரத்தில் கத்தாலம்பாறை கிராமம், காவலப்பட்டி கிராமம், பொந்துப்புள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் பூங்கொடி நேரில் ஆய்வு செய்து வருகிறாா். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பளியா் இன மக்களின் வீடுகளுக்கே செல்லும் வகையில் துணை ஆட்சியா் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையின் சாா்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆணை, பிறப்பு இறப்புச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை,போன்றவைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
Next Story