புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு

புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு

சொற்பொழிவில் கலந்து கொண்டவர்கள் 

புனித மிஃராஜ் இரவு மகான் ஷேகு நூஹு ஒலியுல்லாஹ் அப்பா கந்தூரி என இருவரும் விழா: விஞ்ஞான பார்வையில் வியத்தகு மிஃராஜ் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பில் புனித மிஃராஜ் இரவு மகான் ஷேகு நூஹு ஒலியுல்லாஹ் அப்பா விழா என இருவரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு அப்பா தர்காவில் புதன்கிழமை காலை குர்ஆன் ஷரீஃப் ஓதி தமாம் செய்யப்பட்டது.

இது தொடர்ந்து இரவு நடைபெற்ற புனித மிஃராஜ் இரவு விழாவிற்கு ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா மறைக்கார் தலைமை தாங்கினார். உப தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் சையது இப்ராஹிம் மூசா, உறுப்பினர்கள் ஜீபைர், முகமது உவைஸ் அப்துல்லா ஷெரீப், பீர் முகமது அசின், ஆகியோர் முன்னிலை வைத்தனர். மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி மாணவன் முகமது ஹஸ்ஸஸான், முகமது ஆரிப் ஆகியோர் கிராத் ஓதினர்.

ஜமாத்துல் உலமா சபை மாவட்ட துணைச் செயலாளர் ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா அனைவரையும் வரவேற்று பேசினார் இதில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளரும் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், ஜமாத் உலமா சபை மாவட்டத் துணைத் தலைவரும் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் அஸ்ராத் அகமத் கலந்து கொண்டு விஞ்ஞான பார்வையில் வியத்தகு மிஃராஜ் இரவு என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

முடிவில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் எம் எஸ் ரகுமான் நன்றி கூறினார் இது தொடர்ந்து ஈத் கா ஜும்மா பள்ளிவாசல் இமாம் அக்பர் அலி உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினார்.‌ இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story