சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம்

சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம்

எழுத்து தேர்வு

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சிறைவாசிகளுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்றது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத சிறைவாசிகள். 1249 பேர் கண்டறியப்பட்டு கடந்த செப்டம்பர் 2023 ல் இந்த சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி இந்த சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் துவங்கப்பட்டு 77 ஆண் சிறைவாசிகளும், பெண்கள் தனிச்சிறையில் 30 பெண் சிறைவாசிகளும் கல்வி பயின்றனர். தற்போது ஆறுமாத கால பயிற்சி முடிவடைந்த நிலையில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்றது.

இத்தேர்வு மையத்தினை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மு.சதீஷ்குமார், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் நாகராஜ் முருகன், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, உதவி திட்ட அலுவலர் கார்மேகம், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story