கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா மாற்ற முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா மாற்ற முகாம்
பட்டா மாற்ற முகாம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா மாற்ற முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில், சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன், தனி வட்டாட்சியர் சீதா லட்சுமி ஆகியோர் முன்னிலையில் பட்டா மாற்ற முகாம் நடைபெற்றது . இதில் சாத்தூர் மற்றும் நென்மேனி மேட்டுப்பட்டி ஒத்தையால் நள்ளி வெங்கடாசலபுரம் போன்ற 50க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள பட்டா மாற்றம் பட்டா திருத்தம் பெயர் மாற்றம் பட்டா சிட்டா பெயர் மாற்றம் மற்றும் அனைத்து துறை சார்பாக மனுக்களை கொடுத்தனர்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்ற அதிகாரிகள் இதில் முகாமில் 10க்கும் மேற்பட்ட மனுக்களை உடனடியாக தீர்த்து வைத்தனர். மேலும் அனைத்து மனுக்களையும் பெற்று விரைவில் அனைவருக்கும் பட்டா திருத்தம் மற்றும் பட்டா மாற்றம் செய்திருவதாக உறுதி அளித்தனர். இதில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கிராம பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story