சனிபெயர்ச்சியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை

சனிபெயர்ச்சியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை
சனிபெயர்ச்சி சிறப்பு பூஜை
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
சனிபகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவே 'சனிப்பெயர்ச்சி விழா'வாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள நவக்கிரக சனிபகவானுக்கு நேற்று பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சேலம் தாதுபாய்குட்டை பகுதியில் ஓம்சக்தி வேம்பரசர் விநாயகர் கோவிலில் சனிபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. சனிபகவானுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஜாகீர் அம்மாபாளையத்தில் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சனிபகவானுக்கு பரிகார யாகம் நடைபெற்றது. கலச பூஜை, 108 சங்கு பூஜை, பக்தர்கள் தங்களது கைப்பட தாம்பூலத்தை யாக குண்டத்தில் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பக்தர்கள் தங்கள் கைப்பட கலசபூஜை செய்து சனிபகவானுக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து கலசாபிஷேகம், உபசார பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story