நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து

விபத்து

நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து குறித்து விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மணவாடி, பெருமாள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரன் வயது 60. இவர் டிசம்பர் 24ஆம் தேதி காலை 6:30- மணி அளவில் உப்பிடமங்கலம், வடக்கு கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனம் ஒன்று, நடந்து சென்ற வீரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த உப்பிடமங்கலம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் கலையரசி, இது குறித்து வெள்ளியனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story