பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கத்தில் அதி நவீன திரைப்பட நகரம்.
தலைமை செயலகம்
பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கத்தில் அதி நவீன திரைப்பட நகரம் அமைப்பது தொடர்பாக மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.540 கோடி மதிப்பீட்டில் 140 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரின் அமைக்கப்படும் என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திரைப்பட நகரத்தில் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள், VFX, டிவி ஸ்டுடியோ அமைகிறது. அத்துடன் பணிமனை, உணவகங்கள், அலுவலகம் , டப்பிங், எடிட்டிங், கூட்டு அரங்கம், முதலுதவி அறை, அருங்காட்சியகம் மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரைப்பட நகரம் அமைக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியுள்ளது.இதனிடையே குத்தம்பாக்கத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது நினைவுகூரத்தக்கது.