ஒரு மாணவன் ஒரு பண்ணை குடும்பத் திட்ட துவக்க விழா
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருக்கத்தியில் இயங்கி வரும் வரும் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் ஒரு விவசாயி உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கான கிராமம் மற்றும் நகரங்களில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த மாணவர்கள் வேளாண்மை பற்றி அனுபவபூர்வமாக அறிவு மற்றும் பயிர் சாகுபடி ஏற்படும் சவால்களை அதற்கான தீர்வுகளையும் மாணவர்கள் விவசாயிகள் இருந்து கற்றுக்கொள்ள மற்றும் விவசாயிகளுக்கு பயிரில் ஏற்படும் பிரச்சனை பூச்சி தாக்குதல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை வேளாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு புரிய வைக்க சரி செய்ய ஒரு மாணவன் ஒரு பண்ணை குடும்ப திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
விழாவிற்கு நாகை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஹேமா ஜெயசி நிர்மலா தலைமை தாங்கினார் தோட்டக்கலை துணை இயக்குனர் பரிமேலழகன் முன்னிலை வைத்தார் கல்லூரியின் பேராசிரியர் தாமோதரன் வரவேற்றார் ஒரு மாணவன் ஒரு பண்ணை குடும்ப திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் சீதாலட்சுமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சிகள் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால கண்ணன் பேராசிரியர்கள் அனுராதா. வனிதா, பாலசுப்பிரமணியம் . குமரேசன், கலை, சுதர்சனம் ( காயத்ரி, வெங்கடேஷ், குமார் . நாராயணன் மற்றும் விவசாயிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்