குஜிலியம்பாறை அருகே கண்டக்டரை தாக்கி மாணவன்
பேருந்து நிலையம்
குஜிலியம்பாறை அருகே கண்டக்டரை தாக்கிய மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே அரசு பேருந்தில் சீட் காலியாக உள்ளது சீட்டில் அமருங்கள் என்று சொன்ன நடத்துனரை தாக்கி பல்லை உடைத்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பற்கள் உடைந்து வாயில் ரத்தம் கொட்டிய நடத்துனர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே வேடசந்தூரில் ஓட்டுநரை பள்ளி மாணவர் தாக்கிய சம்பவம் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்தினரிடம் இன்னும் மறையாத நிலை உள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அரசு பேருந்து நடத்துனரை மாணவன் தாக்கிய சம்பவம் அரசு ஓட்டுநர் நடத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story