அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு !

அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு !

மாநில அளவில் தேர்வு

அறிவியல் கண்காட்சி போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் மகத்ராஜ் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளில், அறிவியல் கண்காட்சி பிரிவில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் குணசேகரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த மாணவர் அரசு சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெற்றுள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள், பி.டி.ஏ. நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags

Next Story