அரசினர் தொழிற்பயிற்சி விடுதியில் வழங்கப்பட்ட உணவு குறித்து ஆய்வு
அரசினர் தொழிற்பயிற்சி விடுதியில் வழங்கப்பட்ட உணவு குறித்து ஆய்வு
நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் செயல்படும் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியருக்கு வரப்பட்ட புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவின்படி, நேற்று காலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சமையலறை சுகாதாரமற்று இருந்தது. பொருட்கள் வைப்பு அறையில் உள்ள பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை உரிமம் சான்று உடன் பெற்றிட அறிவுறுத்தப்பட்டது.
சமையலறையை வெள்ளையடித்து உடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தயாரிப்பு விபரம் இல்லாத மளிகைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. அதேபோல் அங்கு செயல்படும் கேன்டின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இடத்தை சுத்தமாக பராமரிக்கவும், சமையல் செய்யும் இடத்தை வெள்ளையடித்து உடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.