அருப்புக்கோட்டையில் பயிர் சேதம் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்* அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 15,000 ஹெக்டர் அளவு மக்காச்சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இந்த பயிர்களில் சுமார் 7,000 ஹெக்ட்டர் அளவு பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பாலவநத்தம் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை அமைச்சரிடம் எடுத்துக்காட்டினார்.