மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு
ஆய்வு
வடலூர் நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடந்தது.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் பண்ருட்டி சாலை ஓடைநாயகி அம்மன் கோவில் பகுதிகளில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர கழக செயலாளர் தமிழ்செல்வன், நகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் நகர மன்ற உறுப்பினர்கள் ஷாகுல் ஹமீது, தமிழ்ச்செல்வி பாலமுருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story