மாநகராட்சி நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு
ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாநகராட்சிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Next Story