சேலம் கடைவீதி பூக்கடையில் திடீர் தீ !

சேலம் கடைவீதி  பூக்கடையில் திடீர் தீ !

தீ விபத்து

சேலம் கடைவீதி பூக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததது.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் கடைவீதி பகுதியில் சில பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பூக்கடையில் இருந்து நேற்று இரவு கரும்புகை வெளியேறியது. பின்னர் அந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கடையில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீயில் கடையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story