கெங்கவல்லியில் குறவர் சமூகத்தினர் திடீர் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் போலி சார் பொய்வழக்கு போட்டுள்ளதாக கூறி, குறவர் சமூகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கெங்கவல்லி - ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.கெங்கவல்லியில் டாஸ்மாக் கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்,
இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்தபோலீசார், இருதரப்பை சேர்ந்த பேரை கைது செய்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட வர்களை தேடி வருகின்ற னர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில், கெங்கவல்லி - ஆத்தூர் நெடுஞ்சாலை அண்ணா சிலை முன்புகுறவர் சமுதாயத்தின் காவல்கார குஞ்சியர் பொதுநலசங்கம் தலைவர்பொன்னுவேல்,
வக்கில் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் போலீசார் குறவர் சமூகத்தினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி, சாலை மறியலில் ஈடு பட்டனர்.இது குறித்த தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார், மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார்,
இன்ஸ்பெக் டர்கள், சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து, வழக்கில் சம்மத இல்லாதவர்களை விடுவிப்பதாக டிஎஸ்பி உறுதியளித்தார் இதையடுத்து மறியலை கைவிட்டு அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.