சாலையின் நடுவே கரும்பு லாரி லோடு சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிபாளையம் அருகே சாலையின் நடுவே கரும்பு லாரி லோடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
எடப்பாடி தேவூரிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு,குமாரபாளையம் வழியாக பள்ளிபாளையம் நோக்கி, வந்த சர்க்கரை ஆலைக்கு சென்ற கரும்பு லாரி ஒன்று அக்ரகாரம் என்ற பகுதி அருகே வளைவில் திரும்ப முயன்ற பொழுது, எதிர்பாராதவிதமாக சுமார் பத்து டன் கரும்பு சாலையில் சரிந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . 3 மணி நேரத்திற்கு பிறகு கரும்புகள் அகற்றப்பட்டு அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
Next Story