சோதனைச் சாவடியில் போலீசார் வாகனங்கள் திடீர் சோதனை
தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் வாகனங்கள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் கனிமவளங்கள் லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. இவை அவ்வப்போது தமிழக மற்றும் கேரள போலீசாரால் சோதனை செய்யப்படுகின்றன. நேற்று இரவு புளியரை, ஆரியங்காவு பகுதிகளில் போலீசார் கனிம வள லாரிகளை கொட்டும் மழையில் சோதனை செய்தனர். அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தென்காசியில் இருந்து கேரளா கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் அனைத்து லாரிகளையும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story